Home நாடு சபா ஊழல்: ஷாபியின் மற்றொரு சகோதரரும் கைது!

சபா ஊழல்: ஷாபியின் மற்றொரு சகோதரரும் கைது!

686
0
SHARE
Ad

MOHD SHAFIE APDALகோத்தா கினபாலு –  சபாவில் ஊரக வளர்ச்சி நிதியில் 1.5 பில்லியன் ரிங்கிட் ஊழல் நடைபெற்றதாக எழுந்துள்ள  புகார்களைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக பார்ட்டி வாரிசான் சபாவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் கிராமப்புற மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஷாபி அப்டாலின் ஒரு சகோதரர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், அவரது மற்றொரு இளம் சகோதரரும் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

இந்த விவகாரத்தில் ஷாபி அப்டால் எந்த நேரத்திலும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.