சென்னை – தமிழகத்தில் அதிகரித்து வரும் டிங்கி பாதிப்பால் பலர் மரணமடைந்து வருகின்றனர். டிங்கியை எதிர்க்கொள்ளும் விதமாக ஆங்காங்கே பலரும் நிலவேம்புக் கசாயத்தைப் பரிந்துரைத்து தன்மூப்பாக வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், நிலவேம்புக் கசாயம் நல்லது கிடையாது என்று அண்மையில் ஒரு கருத்து பரவி வருகின்றது.
இதனைக் கருத்தில் கொண்டு கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், ஆராய்ச்சி அலோபதியார் தான் செய்யவேண்டுமென்றில்லை பாரம்பரியக் காவலர்களே செய்திருக்கவேண்டும். மருந்துக்கு பக்கவிளைவுண்டு என்பதும் பாரம்பரியம் தான் என்றும் கமல் குறிப்பிட்டிருக்கிறார்.