Home கலை உலகம் தனுஷ் படம் பற்றிய உண்மையை வெளியிட்ட கவுதம்!

தனுஷ் படம் பற்றிய உண்மையை வெளியிட்ட கவுதம்!

800
0
SHARE
Ad

gautammenon759சென்னை – கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய திரைப்படமான ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’ திரைப்படத்தில் வரும் ‘மறுவார்த்தை பேசாதே’ பாடல் உலகமெங்கும் பிரபலம்.

யுடியூப்பில் பல லட்சம் பார்வையாளர்களைக் கொண்டிருக்கும் அப்பாடல் யாரால் உருவாக்கப்பட்டது? ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் யார்? என்பதை கவுதம் மேனன் இவ்வளவு நாட்களாக வெளியே சொல்லாமல் இரகசியமாக வைத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று தீபாவளியை முன்னிட்டு, அந்த உண்மையை வெளியிட்டதோடு, ‘மறுவார்த்தை பேசாதே’ பாடலின் மற்றொரு பதிப்பையும் வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

darbuka sivaஎனவே, கவுதம் வெளியிட்ட தகவலின் படி, ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் வேறுயாருமல்ல நடிகரும், இசையமைப்பாளருமான தர்புகா சிவா தான்.

இவர் ஏற்கனவே கிடாரி திரைப்படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.