Home இந்தியா “தவறான வழிகளில் 193.06 கோடி பெற்றார்” – சாகிர் நாயக் மீது இந்தியா குற்றப் பத்திரிக்கை...

“தவறான வழிகளில் 193.06 கோடி பெற்றார்” – சாகிர் நாயக் மீது இந்தியா குற்றப் பத்திரிக்கை தாக்கல்

1225
0
SHARE
Ad

புதுடில்லி – மலேசியாவில் தஞ்சமடைந்திருக்கும் சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக் மீது இந்திய அரசாங்கத்தின் அமுலாக்கப் பிரிவு இன்று வியாழக்கிழமை (மே 2) மும்பையிலுள்ள கள்ளப் பணப் பரிமாற்றத்திற்கான சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை ஒன்றை சார்வு செய்திருக்கிறது. அதன்படி சுமார் 193.06 கோடி ரூபாயை வருமானமாக சாகிர் நாயக் குற்றச் செயல்களின் மூலம் பெற்றிருக்கிறார் என அந்தக் குற்றப்பத்திரிக்கை விவரிக்கிறது.

இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது சாகிர் நாயக் மீதான இரண்டாவது குற்றப் பத்திரிக்கையாகும். 2006-ஆம் ஆண்டில் சாகிர் நாயக் மீதான முதல் குற்றப் பத்திரிக்கையை இந்திய அமுலாக்கப் பிரிவு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

சட்டவிரோதமான முறையில் சாகிர் நாயக் பெற்ற பணத்தின் ஒரு பகுதிதான் மேலே குறிப்பிட்ட 193.06 கோடி என்றும் இன்றைய குற்றப் பத்திரிக்கை விவரித்தது.