Home நாடு பத்து ஆராங்கில் கணபதி – வீரசேனனுக்கு நினைவஞ்சலி

பத்து ஆராங்கில் கணபதி – வீரசேனனுக்கு நினைவஞ்சலி

893
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலாயாத் தொழிற்சங்க சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் எஸ்.ஏ. கணபதி 1949 மே மாதம் 4-ஆம் நாள் விடியற்காலையில் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் புடு சிறை வளாகத்தில் தூக்கிலிடப்பட்டார். இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைக்காகவும் சம்பள பாகுபாட்டிற்கு  எதிராகவும் போராடிய இளந்தலைவர் கணபதியை, தந்திரமாக கைது செய்த ஆங்கிலேய அரசு, துப்பாக்கியும் தோட்டாவும் வைத்திருந்தார் என்று அவர்மீது குற்றம் சாட்டியது.

கணபதி கைது செய்யப்பட்ட நிலையில், இந்திய தோட்டத் தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டம் தொய்வடையக் கூடாதென்பதற்காக கணபதியின் தளபதியாகத் திகழ்ந்த வீரசேனன் மலாயாத் தொழிற்சங்க சம்மேளனத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதையும் பொறுக்காத ஆங்கில ஆட்சியாளர்கள், கணபதியைத் தூக்கில் இடுவதற்கு முதல் நாளே(மே 03) வீரசேனனை சிலாங்கூர் பத்து ஆராங்கில் சுட்டுக் கொன்றனர்.

#TamilSchoolmychoice

இனம், மொழி பாராமல் அனைத்துத் தொழிலாளர்களுக்காகவும் பாடுபட்ட இவ்விரு தலைவர்களும் அநியாயமாக உயிர் துறந்து 70 ஆண்டுகள் நிறைவதை முன்னிட்டு அவர்களுக்கு வட்டார சமூக அமைப்புகளின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

சிலாங்கூர், பத்து ஆராங், சுரங்கத் தொழிலாளர் விளையாட்டு மன்றத்திற்கு எதிரே உள்ள திடலில்  மே திங்கள் 4-ஆம் நாள் மாலை 5:00 மணி அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனைவரும் அழைக்கப்படுகின்றனர். இதன் தொடர்பில் அன்று மாலை பண்டார் பத்து ஆராங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரம்பரிய சுற்றுலாவில் பங்கு பெற விரும்புவோர் சுமார் ஒரு மணி நேரத்திற்குமுன் வரும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேல் விவரத்திற்கு: முனியாண்டி(016-2424189) அல்லது சேகரன்(017-888 7221).