கோலாலம்பூர் : துணிச்சல் மிகுந்த தொழிற்சங்கவாதிகளாகத் திகழ்ந்து, மலாயாவாழ் இந்திய சமூகத்திற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் போராடியவர்களுமான எஸ்.ஏ.கணபதியையும் வீரசேனனையும் பிரிட்டிஷ் அரசாங்கம் கம்யூனிஸ்ட்டுகள் என்ற முத்திரை குத்தி தூக்கிலிட்ட நாள் 4 மே 1949. அந்த சோகநாளின் 75-வது ஆண்டு நிறைவை நினைவு கூரும் வகையில் அவர் குறித்த நூல் ஒன்று வெளியீடு காணவிருக்கிறது.
பார்ட்டி ராக்யாட் மலேசியா கட்சியும், சயாம் மரண ரயில்வே நலன் குழுவும் இணைந்து சமூகத்தால் மறக்கப்பட்ட போராட்ட வீரர்களை நினைவு கூரும் நிகழ்ச்சி ஒன்றை எதிர்வரும் 4 மே 2024-ஆம் நாள் 1, Jln Maharajalela, Kampung Attap, 50150 Kuala Lumpur. என்ற முகவரியில் உள்ள சீன அசெம்பிளி மண்டபத்தில் நடத்துகின்றனர்.
பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
#TamilSchoolmychoice
வருகையாளர் பதிவுடன் தொடங்கும் இந்த நிகழ்ச்சியில் கண்காட்சி ஒன்றும் நடத்தப்படும் என்பதோடு, மலாயா கணபதி குறித்த நூல் ஒன்றும் வெளியிடப்படும். மக்களுக்காகப் போராடி உயிர்நீத்த அவர்கள் வாழ்ந்த கொடூரமான சூழ்நிலை குறித்தும் அவர்களின் வாழ்க்கை குறித்தும் கலந்துரையாடலும் நடைபெறும்.