Home உலகம் இலங்கை: தற்கொலைத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

இலங்கை: தற்கொலைத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

653
0
SHARE
Ad

அன்காரா: கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது இலங்கையில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேகநபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை காவல் துறை தெரிவித்துள்ளது.

அவர்கள் கைது செய்யப்பட்டோ அல்லது இறந்தோ இருக்கிறார்கள் என காவல் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும், இறந்தவர்களுள் இரண்டு வெடி குண்டு வல்லுனர்கள் இருந்ததாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

40-க்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.