Home நாடு அரச குடும்பங்களைப் பற்றிய கருத்துகளை பார்த்தே வெளியிடுங்கள்!- சாயிட் இப்ராகிம்

அரச குடும்பங்களைப் பற்றிய கருத்துகளை பார்த்தே வெளியிடுங்கள்!- சாயிட் இப்ராகிம்

741
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மற்றவர்களை கடிந்து முன்வைக்கும் கருத்துகளை போன்று, அரச குடும்பத்தாரையும் அவ்வாறான கருத்துகளால் குறித்துப் பேசுவது சரியானதல்ல என முன்னாள் சட்ட அமைச்சர் சாயிட் இப்ராகிம் கூறினார். துங்கு மக்கோத்தா பல்வேறு நிலைகளில் பல்வேறான கருத்துகளை வெளியிடுபவர்.

சில நேரங்களில் அக்கருத்துகள் கட்டுபடுத்த முடியாத நிலையில் இருக்கும்படியாக இருந்தாலும், அவை நாட்டிற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இம்மாதிரியான விவகாரங்களில் சுல்தானையும் அவரது குடும்பத்தையும் ஏன் வெட்கப்படுத்த வேண்டும்?” என அவர் குறிப்பிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

வீதி சண்டை, சாக்கடைத் தனமான அரசியல்வாதிகளுக்கு புத்தி அளிக்கும் அதே போன்று, அரச குடும்பங்களை சாடுவது சரியானது அல்ல” என அவர் கூறினார்.

நேற்று திங்கட்கிழமை நடந்த சிறப்பு நேர்காணலின் போது, பிரதமர் மகாதீர் முகமட் துங்கு மக்கோத்தா ஜோகூர் துங்கு இஸ்மாயிலை சிறு பையன் எனக் கூறி அறிவற்றவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பிரதமரின் ஊடக மற்றும் தகவல் தொடர்பு ஆலோசகரான அப்துல் காடிர் ஜாசின், ஜோகூர் அரண்மனைக்குச் சொந்தமான மாடோஸ் செண்டெரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் மீது விசாரணை அறிக்கையை தொடங்க வேண்டும் என காவல் துறைத் தலைவரை கேட்டுக் கொண்டுள்ளார்.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனத்தின் மீது வருமான வரி துறை சோதனை நடத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.