Home உலகம் பாகிஸ்தான்: புகழ்பெற்ற சூபி புனிதத்தலத்துக்கு வெளியே குண்டுவெடிப்பு!

பாகிஸ்தான்: புகழ்பெற்ற சூபி புனிதத்தலத்துக்கு வெளியே குண்டுவெடிப்பு!

703
0
SHARE
Ad

லாகூர்: பாகிஸ்தானிலுள்ள லாகூர் நகரத்தின் புகழ்பெற்ற சூபி முஸ்லிம் புனிதத்தலம் ஒன்றுக்கு வெளியே குண்டு வெடித்ததில் குறைந்தது 6 பேர் உயிரிழந்தாக பாகிஸ்தானிய காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் காவல் துறை வாகனம் ஒன்றும் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தெற்காசியவில் உள்ள மிகப் பழமையான சூபி புனிதத்தலத்தில் இந்த வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது.

சம்பவம் நடந்த இடத்தில் பலத்த காவல் போடப்பட்டுள்ளதாகவும், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஓர் அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

பாகிஸ்தானில் ரமலான் நோன்பு தொடங்கியுள்ள சமயத்தில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

மேலும் ஒவ்வொரு வருடமும் சுன்னி, ஷியா பிரிவை சேர்ந்த பலர் இங்கு வருகை தருவது வழக்கம். இந்த புனித்ததலத்தில் 2010-ஆம் நடந்த இரண்டு தற்கொலை குண்டு தாக்குதலில் பலர் உயிரிழந்தனர்.