Home Video 100: முதல் முறையாக காவல் அதிகாரி தோற்றத்தில் அதர்வா!

100: முதல் முறையாக காவல் அதிகாரி தோற்றத்தில் அதர்வா!

828
0
SHARE
Ad

சென்னை: இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் நடிகர் அதர்வா மற்றும் ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 100. சண்டைக் காட்சிகளுடன் திகில் நிறைந்தப் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் முதன்முறையாக அதர்வா காவல் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

தமிழகத்தில் இப்படம் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும், படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குனர் தனது டுவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆயினும்,மலேசியாவில் இப்படம் வெளியிடப்படுகிறது.

#TamilSchoolmychoice

ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் தயாரித்துள்ள இந்த படத்தில் யோகி பாபு, ராகுல் தேவ், ராதாரவி, ஜாங்கிரி மதுமிதா, ஆகாஷ்தீப் சய்கல், விடிவி கணேஷ், அர்ஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.

கடந்த 3-ஆம் தேதி வெளிவந்த இப்படத்தின் முன்னோட்டக் காணொளி பெருமளவில் வரவேற்பைப் பெற்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்: