Home நாடு சண்டாக்கான்: 70 விழுக்காடு வாக்குப் பதிவாகும் என தேர்தல் ஆணையம் நம்பிக்கை!

சண்டாக்கான்: 70 விழுக்காடு வாக்குப் பதிவாகும் என தேர்தல் ஆணையம் நம்பிக்கை!

663
0
SHARE
Ad

சண்டாக்கான்: நாளை சனிக்கிழமை நடைபெற இருக்கும் சண்டாக்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் சுமார் 798 தேர்தல் ஆணைய அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுவார்கள என தேர்தல் ஆணைய துணைத் தலைவர் டாக்டர் அஸ்மி சரோம் தெரிவித்தார்.

வாக்காளர்கள் தங்களின் உரிமையை நிலைநாட்ட நாளை நடைபெற இருக்கும் தேர்தலில் வாக்களிக்க வருமாறு அஸ்மி கேட்டுக் கொண்டார். காலை 7.30 மணியளவில் வாக்களிப்பு மையங்கள் திறக்கப்பட்டு மாலை 5 மணி வரையிலும் செயல்படும் எனவும் அவர் கூறினார்.

19 மையங்களில் சுமார் 70 விழுக்காடு வாக்காளர்கள் நாளை வாக்களிப்பார்கள் என தாம் நம்புவதாக அஸ்மி கூறினார். இரவு 10 மணிக்குள் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.