இதனிடையே, எழுத்தாளரான பிர்டாவுஸ் அப்டில்லா ஹம்சா அல்லது பிபியாபொங் என அழைக்கப்படும் அவர் நேற்றிரவு வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இக்கைது நடவடிக்கையைக் குறித்து பிரதமர் மகாதீர் முகமட் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆளும் சுல்தான்களுக்கு அச்சுறுத்தலாக அமைதல், அவதூறு ஏற்படுத்துதல், அவமதித்தல் போன்ற விவகாரங்களுக்கு வேண்டுமானால் கைது செய்யலாம், ஆனால், இந்த கைது நடவடிக்கையை தம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என பிரதமர் வருத்தம் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய, துங்கு மக்கோத்தா ஜோகூர் துங்கு இஸ்மாயில், தேவையற்ற அவதூறுகளை ஏற்படுத்த வேண்டாமென்றும், அந்த எழுத்தாலரின் கைது நடவடிக்கைக்கும் அவருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.