கோலாலம்பூர்: சரவாக் மாநிலத்தில் அமைந்துள்ள 369 பள்ளிகளுக்கு சூரியசக்தியிலான மின் ஆற்றலை வழங்கும் திட்டம் தொடர்பாக 5 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெற்றதாக கூறப்படுவதை, முன்னாள் பிரதமரின் மனைவி ரோஸ்மா மன்சோர் மீண்டும் மறுத்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை நீதிபதி அசுரா அல்வி முன்னிலையில் அவர் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.
60 வயதான சாய்டி அபாங் சம்சுடின் என்பவரிடமிருந்து ரோஸ்மா 5 மில்லியன் ரிங்கிட் பணத்தை இலஞ்சமாகப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2009-ஆம் ஆண்டுக்கான ஊழல் தடுப்பு ஆணைய சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஊழலாகப் பெற்ற பணத்தைக் காட்டிலும் ஐந்து மடங்கு அபராதமும் விதிக்கப்படும். வழக்கு மீண்டும் வருகிற ஜூன் 25-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.