Home நாடு சண்டாக்கான்: நம்பிக்கைக் கூட்டணி வெற்றியைத் தக்க வைத்தது!

சண்டாக்கான்: நம்பிக்கைக் கூட்டணி வெற்றியைத் தக்க வைத்தது!

830
0
SHARE
Ad

சண்டாக்கான்: சண்டாக்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்டு முடிந்த வேளையில், நம்பிக்கைக் கூட்டணியைப் பிரதிநிதித்துப் போட்டியிட்ட ஜசெக கட்சி வேட்பாளர் விவியன் வோங் வெற்றிப் பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

விவியன் வோங் 16,012 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார். நம்பிக்கைக் ஐக்கிய சபா கட்சி வேட்பாளர் லிண்டா 4,491 வாக்குகளைப் பெற்றுள்ளார். சுமார் 11,521 வாக்குகள் பெரும்பான்மையில் விவியன் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, சண்டாக்கானில் தனது வெற்றியை நம்பிக்கைக் கூட்டணி தக்கவைத்துக் கொண்டது.

#TamilSchoolmychoice

சுமார் 54.4 விழுக்காட்டினர் இம்முறை தேர்தலில் வாக்களித்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சீனர்கள் பெரும்பான்மையாகக் கொண்ட சண்டாக்கானில், இவ்வெற்றியானது முன்னதாகவே கணிக்கப்பட்டதாக இருந்தாலும், அதிகமான முஸ்லிம் மக்களைக் கொண்டிருக்கும் சிம் சிம் மற்றும் பூலாவ் பெர்ஹாலா வாக்காளர்களும் பெருவாரியாக நம்பிக்கைக் கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர்.

இன்று மாலை 5.00 மணியுடன் நிறைவு பெற்ற சண்டாக்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வாக்களிப்பைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வந்த நிலையில்ஐக்கிய சபா கட்சி வேட்பாளர் லிண்டா நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் விவியன் வோங்கை விட குறைவான வாக்குகளில் பின்னடைவைச் சந்தித்தார்.