இதனை அடுத்து, உலக பத்திரிக்கை சுதந்திரத்திற்கான மலேசியாவின் தரநிலை, 22 இடங்களைக் கடந்து 123-வது இடத்திற்கு முன்னேறியது.
இது ஒரு சிறிய சாதனையாக பார்க்கப்பட்டாலும், தேசிய முன்னணி அரசாங்கம் கவிழ்ந்ததற்குப் பிறகு பத்திரிக்கை சுதந்திரத்திற்கு கிடைத்த புதிய வாய்ப்பு இது என ரிப்போர்ட்டர்ஸ் வித்தாவுட் போர்டர்ஸ் (ஆர்ஒஎப்) நிறுவனம் தெரிவித்துள்ளது.
கார்ட்டூனிஸ்ட் சுனார் மற்றும் சரவாக் ரிப்போர்ட் போன்ற பத்திரிக்கை சார்ந்து செயல்பட்டவர்கள் மீதான இருட்டடிப்பை நீக்கியதன் மூலமாக மீண்டும் அவர்கள் பணிக்கு திரும்பும் வாய்ப்பினை ஏற்படுத்தி உள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.
பொய்யான மற்றும் சர்ச்சைக்குரிய செய்திகளை வெளியிடும் சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டால், மேலும் மலேசிய பத்திரிக்கைக்கு கிடைத்த வெற்றி எனக் கொண்டாடலாம் எனவும், அதற்கு பிறகு புத்ராஜெயாவிலிருந்து எந்தவொரு வழிமுறைகளுக்காகவும் ஊடகங்கள் காத்திருக்கத் தேவையில்லை எனவும் அது குறிப்பிட்டது.