Home வணிகம்/தொழில் நுட்பம் வாட்ஸ் அப்: கண்காணிப்பு மென்பொருட்களில் ஊடுருவ ஹேக்கர்ஸ் முயற்சி!

வாட்ஸ் அப்: கண்காணிப்பு மென்பொருட்களில் ஊடுருவ ஹேக்கர்ஸ் முயற்சி!

1088
0
SHARE
Ad

கலிபோர்னியா: வாட்ஸ் அப் செயலியிலுள்ள மிகப் பெரிய குறைபாட்டை பயன்படுத்தி அவை நிறுவப்பட்டுள்ள திறன்பேசி உள்ளிட்ட மின்னணு கருவிகளில் உள்ள கண்காணிப்பு மென்பொருட்களில் ஊடுருவ ஹேக்கர்ஸ் (குறும்பர்) முயன்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலியின் குறிப்பிட்ட சில பயன்பாட்டாளர்களை மட்டும் இலக்கு வைத்து, திறன்பெற்ற ஹேக்கர் இதை மேற்கொண்டதாக அந்நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலிலிருந்து ஏனைய வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்களை காப்பாற்றுவதற்கான மேம்படுத்தப்பட்ட பதிப்பை கடந்த வெள்ளிக்கிழமையன்று வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டது.

#TamilSchoolmychoice

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வாட்ஸ் அப் செயலியின் புதிய பதிப்பை உடனடியாக மேம்படுத்துமாறு தனது 1.5 பில்லியன் பயன்பாட்டாளர்களையும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.