13-லிருந்து 16 நில இடமாற்ற திட்டங்களில் முன்னாள் பிரதமர்களும், தற்காப்பு அமைச்சர்களும் சம்பந்தப்பட்டிருப்பதாக தற்கால தற்காப்பு அமைச்சர் முகமட் சாபு கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
அவ்வனைத்து 16 திட்டங்களும் 2,923 ஏக்கர் (1,183 ஹெக்டேர்) நிலப்பரப்பைக் கொண்டது எனவும், தற்காப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான இந்த நிலப்பகுதிகள் பெயர் மாற்றம் கண்டும், காணவும் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
1997-ஆம் ஆண்டிலிருந்து இந்த நில இடமாற்ற முறை தொடங்கியதை ஒப்புக்கொண்டிருந்தாலும், இந்த விவகாரத்தில் மகாதீர் சம்பந்தப்படவில்லை என முகமட் சாபு கூறியிருந்தார்.