Home உலகம் இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட 3 அமைப்புகளுக்கு தடை!

இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட 3 அமைப்புகளுக்கு தடை!

917
0
SHARE
Ad

கொழும்பு: இலங்கையில் தீவிரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் மூன்று அமைப்புகளுக்கு தடை விதிக்கப்படுள்ளது.

தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாதைய் மில்லதே இப்ராஹிம் மற்றும் வில்லயாத் அஸ் செயிலானி ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் ஒப்புதலுடன் இது நிறைவேற்றப்பட்டது.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் அவசரகால விதிமுறைகளின் 75-1 சரத்திற்கு அமைய இந்த அரச ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதியன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, அதனுடன் தொடர்புடையதாக கூறப்படும் அமைப்புகளுக்கு ஜனாதிபதி சிறிசேனா தடை விதித்திருந்தார்.