Home நாடு அலுவலக நேரத்தில் பிரச்சாரத்தில் ஈடுப்பட முடியாது எனும் முடிவு சரியானதல்ல!- மகாதீர்

அலுவலக நேரத்தில் பிரச்சாரத்தில் ஈடுப்பட முடியாது எனும் முடிவு சரியானதல்ல!- மகாதீர்

769
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அலுவலக நேரங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் அமைச்சரவை உறுப்பினர்கள் எந்தவொரு பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது எனும் தேர்தல் ஆணையத்தின் முடிவின் மீது தமக்கு உடன்பாடில்லை என பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார். 

இவ்வாறான செயல்முறை எதிர்கட்சியினருக்கு கூடுதல் நேரத்தையும் வாய்ப்பையும் அளிப்பதாக அமைகிறது என அவர் குறிப்பிட்டார்.

கடந்தஆண்டுநடந்த கேமரன் மலை நாடாளுமன்ற இடைத் தேர்தலில், பிரதமராக இருந்தும் தாம் அரசாங்க வசதிகளைப் பயன்படுத்த முடியாது போனதை மகாதீர் சுட்டிக் காட்டினார்.

#TamilSchoolmychoice

எந்த ஒரு தலைவரும் அரசாங்க சொத்துக்களை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தினால், அது 1954-ஆம் ஆண்டு தேர்தல் ஆணைய சட்டப்படி குற்றமாகும் என்று தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் கூறியிருந்தார்.