புத்ராஜெயா: நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியதும், அரசாங்கத்தில் முக்கியப் பொறுப்புகளை வகிக்காத கட்சி உறுப்பினர்களின் அதிருப்தி கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களை பிரதமர் மகாதீர் முகமட் அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதே மாதிரியான சூழல் தாம் அம்னோவில் இருந்த போது ஏற்பட்டதாக அவர் கூறினார்.
அரசியல் ரீதியிலான பொறுப்புகளை அமைத்து உருவாக்கப் போவதில்லை என நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை பிரதமர் நினைவுக்கூர்ந்தார்.
ஆயினும், கட்சியின் வெற்றியை உறுதி செய்த கட்சி உறுப்பினர்களுக்கு வேறொரு விதத்தில் வெகுமதிகள் அளிக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.
இந்த புனித ரமலான் மாதத்தில் தலைவர்கள் தங்களின் ஆசைகளை கட்டுப்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.