Home இந்தியா “நான் பொய் சொல்லாத, ஊழல் இல்லாத, நேர்மையான அரசியல் பாரம்பரியத்திலிருந்து வந்தவள்!”- தமிழிசை

“நான் பொய் சொல்லாத, ஊழல் இல்லாத, நேர்மையான அரசியல் பாரம்பரியத்திலிருந்து வந்தவள்!”- தமிழிசை

915
0
SHARE
Ad

சென்னை: இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தல் நடந்து கொண்டிருக்கையில், கடந்த திங்கட்கிழமை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆயினும், இந்த சந்திப்பானது மரியாதை நிமித்த சந்திப்பு என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இதன், சூடு தனியாத போது நேற்று செவ்வாய்க்கிழமை பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், ஸ்டாலின் பாஜகவுடனும் கூட்டணி பேசி வந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். அதன் தொடர்பில், இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

ஸ்டாலின் பாஜகவுடன் கூட்டணி பேசவில்லை என்பதை ஸ்டாலின் நிரூபிக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வருகிற மே 23-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள வேளையில், அரசியல் தலைவர்கள் கூட்டணி குறித்த பேச்சுகளில் களம் இறங்கி விட்டனர்.

தமிழிசையின் இக்கருத்துக்கு கொதித்தெழுந்த ஸ்டாலின், தாம் பாஜகவுடன் கூட்டணி பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார் என்று கூறியிருந்தார். ஒரு வேளை தமிழிசை நிரூபிக்கத் தவறினால் மோடியும், தமிழிசையும் அரசியலை விட்டு விலகுவார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதில் அளித்த தமிழிசை, காலம் வரும் போது தாம் அதனை நிரூபிக்கத் தயார் எனவும், தாம் பொய் சொல்லாத, ஊழல் செய்யாத, நேர்மையான அரசியல் பாரம்பரியத்திலிருந்து வந்ததாகவும் கூறினார். மேலும்,  கலைஞரின் மகன் நீண்ட நாள் அரசியலில் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் தமக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.