Home நாடு தவறிழைக்கப்பட்டிருந்தால் 4 நாடாளுமன்ற வெற்றியை இரத்து செய்ய வேண்டும்!- லிம் கிட் சியாங்

தவறிழைக்கப்பட்டிருந்தால் 4 நாடாளுமன்ற வெற்றியை இரத்து செய்ய வேண்டும்!- லிம் கிட் சியாங்

804
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நான்கு நாடாளுமன்றங்களில் இராணுவ வாக்காளர்களை இடமாற்றியதன் தொடர்பில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங் கூறியுள்ளார். ஒரு வேளை அவ்வாறு ஏற்பட்டிருந்தால், தேர்தல் ஆணையம் அவர்களின் வெற்றியை இரத்து செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.   

அந்நான்கு தொகுதிகளிலும் முன்னாள் தேசிய முன்னணி தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளாகும். அதாவது, பாகன் டத்தோ (அகமட் சாஹிட் ஹமிடி), செம்ப்ரோங் (ஹிசாமுட்டின்), செகாமாட் (டாக்டர் எஸ். சுப்ரமணியம்) மற்றும் பெரா (இஸ்மாயில் சம்ரி யாகோப்) ஆகிய தொகுதிகளில் இராணுவ வாக்காளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நான்கு தொகுதிகளில் டாக்டர் சும்ரமணியம் மட்டும் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.

இராணுவ அதிகாரிகளின் வாக்களிக்கும் இடத்தினை மாற்றுவதில் தேர்தல் ஆணைய அதிகாரிகளும் உடன் சம்பந்தப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இது ஒரு முறைகேடான மற்றும் ஜனநாயகமற்ற செயலாகும். இராணுவ அதிகாரிகளின் வாக்களிக்கும் இடத்தினை மாற்றியமைத்து, அவர்களுக்கு சாதகமான முடிவுகளை பெறுவதற்கு, இது செயல்படுத்தப்பட்டுள்ளது” என லிம் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை அறிக்கைக்கு காத்திருப்பதாக அண்மையில் தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் குறிப்பிட்டிருந்தார்.