அந்த புகைப்படங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் சில முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது, நிலவு தொடர்ந்து சுருங்கிக் கொண்டும், அதில் பிளவுகள் ஏற்பட்டுக் கொண்டிருப்பதாகவும், இதற்கு காரணம் நிலவில் ஏற்பட்ட நில நிடுக்கங்கள் எனவும் தெரியவந்துள்ளது.
நிலவில் வட துருவத்திற்கு அருகில் உள்ள மேரே பிரிகோரிஸ் என்ற இடத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளாக நாசா நிறுவனத்தால் சுமார் 12,000-க்கு மேற்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டது. புவியியல் பார்வையில் மிகப்பெரிய பரப்பாக கருதப்படும் இந்த மேரே பிரிகோரிஸ், சுருங்கிபிளவுபட்டுக் கொண்டிருப்பதை இந்த ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
நிலவில் ஏற்படும் வெப்ப மாற்றங்களினால் இந்த நிலநடுக்கம் ஏற்படுகிறது எனக் கூறப்படுகிறது. 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் நிலவு தோன்றிய பொழுது இருந்த வெப்பத்துடன் ஒப்பிடுகையில், தற்போது நிலவு தனது வெப்பத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருப்பதாக நாசா குறிப்பிட்டுள்ளது.
நிலவின் உட்பரப்பில் ஏற்படும் இந்த சுருக்கங்களும் பிளவுகளும், நிலவின் மேற்பரப்பையும் பாதிக்கிறது என அது குறிப்பிட்டிருந்தது.