Home கலை உலகம் தமிழகம்: ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் நடிகர் சங்க தேர்தல்!

தமிழகம்: ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் நடிகர் சங்க தேர்தல்!

839
0
SHARE
Ad

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தற்போது அனைவரின் பதவிக்காலமும் முடிந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் தேர்தல் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடிகர் சங்கத்தில் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.

இவர்களது பதவிக் காலம் கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. ஆயினும், நடிகர் சங்க கட்டட பணிகள் காரணமாக ஆறு மாத காலத்துக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

தற்போது, அப்பணிகள் முடிவடைந்துள்ள வேளையில், கடந்த மாதம் நடிகர் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது

தேர்தல் நடத்துவது குறித்து விவாதிப்பதற்காக கூடிய இந்த அவசர செயற்குழு கூட்டத்தில் நடிகர் சங்க தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.