Home நாடு தேர்தல் கால பிரச்சாரத்திற்கு அமைச்சர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்!- பெர்சே

தேர்தல் கால பிரச்சாரத்திற்கு அமைச்சர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்!- பெர்சே

665
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வேலை நாட்களில் தேர்தல் பிரச்சாரங்களை செய்யவிரும்பினால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அல்லது அமைச்சர்கள் வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக் கொள்ளுமாறு பெர்செ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவினால் நடப்பு அரசாங்கத் தலைவர்கள் தேர்தல் காலங்களில் முழுமையாக செயலாற்ற இயலாமல் போவதாகவும், இந்நிலையினால் எதிர்கட்சிகளுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது எனவும் பிரதமர் குறிப்பிட்டிருந்ததற்கு பெர்சே இவ்வாறு தெரிவித்தது.

மேலும், பிரச்சாரத்தின் போது அமைச்சர்கள் அவர்களுக்காக ஏற்படுத்தப்பட உத்தியோகபூர்வ வாகனங்கள், ஓட்டுனர்கள் மற்றும் சில பாதுகாப்பு அதிகாரிகளுடன் தேர்தல் காலத்தில் களம் இறங்கலாம் எனவும் பரிந்துரைத்திருந்தது. பிரதமருக்கான அரசாங்க விமானக் கட்டண செலவை அவர் சார்ந்திருக்கும் கட்சி செலுத்தினால் அதனை அவர் பயன்படுத்தலாம் எனவும் அது குறிப்பிட்டிருந்தது.

#TamilSchoolmychoice

இதனிடையே, அலுவலக நேரங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் அமைச்சரவை உறுப்பினர்கள் எந்தவொரு பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது எனும் தேர்தல் ஆணையத்தின் முடிவின் மீது தமக்கு உடன்பாடில்லை என பிரதமர் மகாதீர் முகமட் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார்.

இவ்வாறான செயல்முறை எதிர்கட்சியினருக்கு கூடுதல் நேரத்தையும் வாய்ப்பையும் அளிப்பதாக அமைகிறது என அவர் குறிப்பிட்டார்.