Home நாடு மகாதீரின் பங்கு நாட்டிற்கு மிக முக்கியமானது, அது தொடர வேண்டியது!- அன்வார்

மகாதீரின் பங்கு நாட்டிற்கு மிக முக்கியமானது, அது தொடர வேண்டியது!- அன்வார்

752
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டின் அரசியல் விவகாரங்களில் பிரதமர் மகாதீரின் பங்கு எப்போதும் முக்கிய பங்கினை வகிக்கும் என பிகேஆர் கட்சி தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

“எல்லா சூழ்நிலைகளிலும் அவருக்கு முக்கிய இடத்தை வழங்க வேண்டும். நாளை நான் பிரதமராக பதவி வகித்தாலும், மகாதீர் நாட்டின் அரசியல் விவகாரங்களில் மட்டுமல்லாது அனைத்து விவகாரங்களிலும் முக்கிய பங்கினை வகிப்பார்” என அன்வார் குறிப்பிட்டார்.

தலைமை பொறுப்பு மாற்றம் குறித்து செய்தியாளர்கள் வினவிய போது, அதனை பிரதமர்தான் முடிவு எடுக்க வேண்டும் என அன்வார் தெரிவித்தார்.