Home நாடு ரோம் சாசனம்: மலேசியாவின் பெயர் நீக்கப்பட்டது!

ரோம் சாசனம்: மலேசியாவின் பெயர் நீக்கப்பட்டது!

1046
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அனைத்துலக குற்றவியல் நீதிமன்றமான ரோம் சாசனத்தின் பட்டியலிலிருந்து மலேசியாவின் பெயர் அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின் மூலம், மலேசிய வெளியுறவு அமைச்சு இது குறித்து ஆரம்பத்திலேயே மனுவை வழங்கியதன் அடிப்படையில் மலேசியா அப்பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

மலேசிய அரசாங்கம் கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி அனைத்துலக குற்றவியல் நீதிமன்றமான ரோம் சாசனத்திலிருந்து விலகிக் கொள்வதாக வெளியுறவு அமைச்சு அறிக்கை வெளியிட்டிருந்தது. ஆயினும், படுகொலைகள், மனிதாபிமானமற்ற குற்றங்கள், போர்க்குற்றங்கள், குற்றவியல் ஆக்கிரமிப்புகள் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டிருக்கும் என அது உறுதியளித்திருந்தது.

#TamilSchoolmychoice

ஐநாவின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில், ரோம் சாசனத்தை நிறைவேற்றும் நாடுகளில் மலேசியாவின் பெயர் இடம்பெற்றுள்ளதைக் குறித்து நேற்று புதன்கிழமை வெளியுறவு அமைச்சு அதன் அதிருப்தியை வெளியிட்டிருந்தது.