செருப்பு வீசிய நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருவதாகவும், தீவிரவாதம் குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
கடந்தஇரண்டு நாட்களாக கமலின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சால் மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
பிரச்சனை பெரிதானதை தொடர்ந்து கமலின் வீடு மற்றும் கட்சி அலுவலகங்களுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய கமல் மதுரைக்கு வந்தார். அவர் மேடையை நோக்கி சென்றபோது, அவரை நோக்கி செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.