சென்னை – பொதுவாக தமிழ்த் திரைப்படங்களில் அறிமுகமாகும் நடிகைகளின் பொற்காலம் 5 முதல் 10 ஆண்டுகள் வரைதான். அதற்குப் பின்னர் வாய்ப்புகளை இழந்து துணைப் பாத்திரங்களில் நடிப்பார்கள், அல்லது அக்காள், அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து இறுதியாக அம்மா வேடங்களில் நிரந்தரமாகிவிடுவார்கள்.
அதிலும் திருமணமாகிவிட்டால் ஒரு சிலர் திரையுலகிலிருந்தே காணாமல் போய்விடுவார்கள். குடும்பம், குழந்தைகள் என இல்லறம் கண்டு, பின்னர் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வருவார்கள்.
ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. திருமணம் முடிந்தாலும், மணமுறிவு ஏற்பட்டாலும் தொடர்ந்து நடிக்கிறார்கள். அதிலும் கவர்ச்சிக் கதாபாத்திரங்களில் கூட அசராமல் நடிக்கிறார்கள்.
#TamilSchoolmychoice
இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் தங்களின் கவர்ச்சியான தனித் தோற்றங்களையும், கணவரோடு இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு இரசிகர்களை மகிழ்விப்பார்கள்.
அப்படிப்பட்டவர்களில் ஒருவர் சமந்தா. தமிழில் அறிமுகமாகி, பின்னர் தெலுங்கிலும் முன்னணி நட்சத்திரமாக உருவெடுத்தவர், தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யா அக்கினேனியைத் திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின்னரும் நடிப்பதைக் குறைத்துக் கொள்ளவில்லை சமந்தா. தொடர்ந்து மற்ற கதாநாயகர்களுடன் இணைந்து கவர்ச்சியான கதாபாத்திரங்களில் கூட நடித்தார்.
அண்மையில் வெளிவந்த ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தில் சமந்தா ஏற்றிருந்த கதாபாத்திரத்தின் தன்மையும், அவர் வாயிலிருந்து வெளிவந்த வார்த்தைகளும் இரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கின. மலேசியாவில் படம் தடை செய்யப்பட்டதால் அதைக் காணும் பாக்கியம் மலேசிய தமிழ்ப்பட இரசிகர்களுக்குக் கிடைக்கவில்லை.
அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களையும், கணவர் நாகசைதன்யாவோடு கொஞ்சி மகிழும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருபவர் சமந்தா. அவற்றில் சில உங்களின் பார்வைக்கு:
சமந்தாவின் உடல் கட்டுக்கோப்பிற்கு இதுபோன்ற இடைவிடாத பயிற்சியும் ஒரு காரணம்…