கோலாலம்பூர்: நாட்டில் ஏற்பட்ட தளர்வினை, குறிப்பாக மலேசிய சமுதாயத்தின் பொருளாதார ஆதிக்கத்தை மேம்படுத்த, குறைந்தபட்சம் 10 ஆண்டு காலம் தேவைப்படும் என மொகிதின் யாசின் தெரிவித்தார். அதற்காக முயற்சியில் நம்பிக்கைக் கூட்டணி இறங்கி விட்டதாகவும் அவர் கூறினார்.
மலேசியாவில் எந்தவொரு சமூகமும் இனி வறுமை, மோசமான வாழ்க்கை முறை, முன்னேற்றமின்மை, கடினமான வாழ்க்கையை வாழாமல் இருப்பதற்காக, சமீபத்தில் அரசாங்கம் அறிமுகப்படுத்திய “அனைவருக்குமான வளம்” எனும் முன்முயற்சியை பெர்சாத்து கட்சியின் தலைவருமான மொகிதின் சுட்டிக் காட்டினார்.
இவ்வாறான சூழ்நிலையில் குறிப்பாக இஸ்லாமிய மக்கள் தங்களின் முயற்சியைக் கைவிடாது தொடர்ந்து விடாமுயற்சியுடன் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.