Home இந்தியா பிரதமராக பதவியேற்ற 5 ஆண்டுகளில் முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்த மோடி!

பிரதமராக பதவியேற்ற 5 ஆண்டுகளில் முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்த மோடி!

715
0
SHARE
Ad

புது டில்லி:  இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்ற ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக பிரதமர் மோடி செய்தியாளர்களை நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பாஜக தலைவர் அமித் ஷாவும் உடன் இருந்தார்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்து தேர்தல் நடந்த போது ஐபிஎல் விளையாட்டு கூட இங்கு நடக்கவில்லை என்றும், ஆனால் என்றைக்கு பாஜகவின் வலிமையான அரசு ஆட்சிக்கு வந்ததோ, அன்று முதல் ஐபிஎல், ரம்ஜான், பள்ளித் தேர்வுகள் உள்ளிட்டவை மிகவும் அமைதியாக நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

பாஜக அரசு மீண்டும் இரண்டாவது முறையாக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

மக்கள் பாஜகவை தங்கள் மனதில் நிறுத்தியுள்ளனர். உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. அதன் வலிமையை மக்கள் கொண்டாட வேண்டும்.” என்று மோடி கூறுனார்.

“உங்களுக்கு (மக்கள்) நன்றி தெரிவிக்கவே நான் இங்கு வந்தேன். உங்கள் ஆசிர்வாதத்தால் நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக நாட்டிற்கு உழைத்தேன். மீண்டும் எனது பணியை விரைவில் தொடங்கி உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்என மோடி தெரிவித்தார்.