கலிபோர்னியா: வாட்ஸ் அப்பில் உள்ள சுயவிவர படங்களை (Profile picture) பதிவிறக்கம் செய்வதை தடுக்கும் வகையில் அது சம்பந்தப்பட்ட பட்டனை வாட்ஸ் அப் நிறுவனம் நீக்கவுள்ளது.
இந்த மாற்றம், வாட்ஸ் அப்பின் புதிய ஆண்ட்ராய்ட் மேம்பாட்டில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆண்ட்ராய்ட் மற்றுமின்றி ஐபோன்களிலும், இந்த வசதியை இந்நிறுவனம் நீக்கவுள்ளது.
தற்போழுது, ஒருவரின் சுயவிவர படத்தை திறந்தால், அங்கு அந்த புகைப்படத்தின் அருகில் பகிரும் பட்டன் இருக்கும். அந்த பட்டனை அழுத்தி, அந்த புகைப்படத்தை டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த செயல்முறையினால் பலரது இரகசிய விவகாரங்கள் பாதுகாக்கப்படும் என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.