Home நாடு சிரம்பான் அருள் ஞான பீடம்: வேதமூர்த்தி திறந்து வைத்தார்

சிரம்பான் அருள் ஞான பீடம்: வேதமூர்த்தி திறந்து வைத்தார்

824
0
SHARE
Ad

சிரம்பான் – ஆன்மிக நெறி, ஆன்ம நேயம், தியானம், மன வளப் பயிற்சி என்றெல்லாம் சமய நன்னெறிக்கு வித்திடும் வண்ணம் சிரம்பான் நகரில் நிறுவப்பட்டுள்ள அருள் ஞான பீடத்தை பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை மே 12-ஆம் தேதி திறந்து வைத்தார்.

மலேசிய இராமகிருஷ்ண இயக்கத்தின் (மிஷன்) தலைவர் சுவாமி சுப்ரியானந்தாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

சிரம்பான், ஜாலான் பாந்தாய், 9-ஆவது கல், 17-ஆம் எண் என்ற இடத்தில் அமைந்துள்ள அருள் ஞான பீடம், கடந்த கடந்த ஏழு ஆண்டுகளாக கட்டம் கட்டமாக புதுப்பிக்கப்பட்டு தற்பொழுது தொடக்க விழாவை எட்டியுள்ளது. இதன் தொடர்பில் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி பெரிதும் உதவினார் என்று இந்த பீடத்தின் தலைவரும் ஆசிரியையுமான இலெ.உமாதேவி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கடந்த ஞாயிற்றுக்கிழமை, மே 12-ஆம் நாள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் எண்பது பேருக்கும் மேற்பட்ட சமய அன்பர்கள் கலந்து கொண்டனர் என்றும் உமாதேவி தெரிவித்தார்.