Home நாடு ஜெயதாஸ் இறுதிச் சடங்கில் அன்வார் இப்ராகிம்

ஜெயதாஸ் இறுதிச் சடங்கில் அன்வார் இப்ராகிம்

1064
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று செவ்வாய்க்கிழமை காலமான சமூகப் போராட்டவாதி எஸ்.ஜெயதாசின் இறுதிச் சடங்குகளில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கலந்து கொண்டார்.

பிகேஆர் கட்சித் தலைவரும் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வார் இப்ராகிமுடன், சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி, சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஆகியோரும் ஜெயதாசின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டனர்.

அன்வார் இப்ராகிம் 1998-ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கிய சீர்திருத்தப் போராட்டங்களில் கலந்து கொண்டு மிகத் தீவிரமாகப் போராடியவர் ஜெயதாஸ்.

#TamilSchoolmychoice

52 வயதான ஜெயதாஸ் சிறுநீரகக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்தார்.

பிகேஆர் கட்சியில் நீண்ட காலம் ஈடுபாடு கொண்டிருந்த ஜெயதாஸ் அந்தக் கட்சியில் பல பதவிகளை வகித்திருக்கிறார். பொதுத் தேர்தல்களிலும் அவர் போட்டியிட்டிருக்கிறார்.

ஹிண்ட்ராப் இயக்கத்திலும் தீவிர ஈடுபாடு காட்டிய ஜெயதாஸ் அந்த இயக்கத்தின் தகவல் பிரிவுத் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.