புது டில்லி: இந்திரா காந்தி, நேருவுக்கு பிறகு தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் மூன்றாவது இந்திய பிரதமர் நரேந்திர மோடி திகழ்கிறார். இந்திய மக்களின் இந்தச் செயலை உலக நாடுகள் வியந்து பார்ப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
“இந்தத் தேர்தலில் வெற்றிப் பெற்றது வேட்பாளர்களோ அல்லது கட்சியோ இல்லை. உண்மையில் வெற்றிப் பெற்றது இந்திய மக்கள் மற்றும் இந்திய குடியுரசும்தான். இதனால் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். அடுத்த ஐந்தாண்டுகளில் வலிமையான இந்தியாவை உருவாக்க பாடு படுவேன். தனி பெரும்பான்மையுடன் வெற்றிப் பெற்றிருந்தாலும் என்னுடைய ஆட்சி அனைவரையும் ஒன்றிணைத்த ஒன்றாகதான் இருக்கும்” என மோடி கூறியுள்ளார்.
உலக ஜனநாயகத்தில் இந்த வெற்றி முக்கியமானது என்றும் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற தங்களது கோரிக்கைக்கு கோடிக்கணக்கான மக்கள் ஆதரவு தந்துள்ளனர் என்றும் நேற்றிரவு வியாழக்கிழமை டெல்லியிலுள்ள பாஜக தலைமையகத்தில் கூடியிருந்த போது பிரதமர் மோடி கூறினார்.