Home கலை உலகம் தர்பார் ரஜினிக்கு வில்லனான பிரபல பாலிவுட் முன்னணி நடிகர் தேர்வு!

தர்பார் ரஜினிக்கு வில்லனான பிரபல பாலிவுட் முன்னணி நடிகர் தேர்வு!

807
0
SHARE
Ad

சென்னை: தர்பார் படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக, பிரபல பாலிவுட்டின் முன்னணி நடிகர் சுனில் ஷெட்டி நடிக்கிறார்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம்தர்பார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தை சன் தொலைக்காட்சி நிறுவனம் தயாரித்து வருகிறது

இப்படத்தில் ஏற்கனவே ஒரு சில பாலிவுட் நடிகர்கள் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது முன்னணி பாலிவுட் நடிகர் ஒருவர் இப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். 90-களில் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடுகர் சுனில் ஷெட்டி. இவர் தற்போதுதர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது

#TamilSchoolmychoice