Home நாடு அம்னோ, பாஸ் கூட்டு முயற்சி நோன்பு பெருநாளுக்குப் பிறகு அறிவிக்கப்படும்!

அம்னோ, பாஸ் கூட்டு முயற்சி நோன்பு பெருநாளுக்குப் பிறகு அறிவிக்கப்படும்!

573
0
SHARE
Ad

குபாங் கெரியான்: பாஸ், அம்னோவுடனான கூட்டு முயற்சி, இவ்விரு கட்சிகளுக்கிடையில் உள்ள உறவை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அமையும் என பாஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இஸ்லாமியர்களின் ஒத்துழைப்பை மையப்படுத்திய இந்த ஒத்துழைப்பு, 15-வது பொதுத் தேர்தலில் இட ஒதுக்கீட்டு வரை நீடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் கூறினார். ஆயினும், அதற்கான சாத்தியக்கூறுகளை அவர் நிராகரிக்கவில்லை.

#TamilSchoolmychoice

வருகிற ஜூன் மாதம் கொண்டாடப்பட இருக்கும் நோன்பு பெருநாளுக்கு பிறகு இவ்விரு தரப்பினரும் இது குறித்து ஆழமாக பேச இருப்பதாக அம்னோ கட்சியின் தலைமைச் செயலாளர் அனுவார் மூசா குறிப்பிட்டிருந்தார்.