Home நாடு “பிறரின் உதவியை மட்டும் நம்பி வாழாது, உழைத்து வாழ வேண்டும்”!- மகாதீர்

“பிறரின் உதவியை மட்டும் நம்பி வாழாது, உழைத்து வாழ வேண்டும்”!- மகாதீர்

673
0
SHARE
Ad

லங்காவி: பிறரிடமிருந்து உதவி கிடைக்கும் என எல்லா நேரத்திலும் எதிர்பார்ப்பது சரியானதாக இருக்காது என பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார். மக்கள் தங்களை தாங்களே ஊக்குவித்து முயற்சிகள் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

மற்றவர்களுடைய உதவியை எதிர்பார்ப்பது ஒருவரின் ஆத்மாவை பலவீனப்படுத்தும் என்று டாக்டர் மகாதீர் கூறினார்.

இந்த நோன்பு காலத்தில் நாங்கள் பண உதவிகள் செய்தாலும் கூட, அதனையே பணம் ஈட்டுவதற்கான வழியாக ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. தானாகவே பணத்தை சம்பாதிக்க கற்றுக் கொள்ளுங்கள்” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

நேற்றிரவு லங்காவியில் உள்ள மஸ்ஜிட் நூருல் சாலாமிற்கு வந்திருந்த போது, சமூக மறுவாழ்வு திட்டம் (பிடிகெ) வாயிலாக 150 ஆதரவற்ற மாணவர்களுக்கு நோன்பு பெருநாள் நன்கொடையை பிரதமர் வழங்கினார்.