அந்த வகையில் இந்த ஆண்டு நோன்புப் பெருநாளை முன்னிட்டு பெட்ரோனாஸ் தயாரித்து வெளியிட்டிருக்கும் குறும்படம் “ரெண்டாங் சொராயா”.
நோன்புப் பெருநாளுக்கு சந்தைக்கு செல்லும் சொராயா என்ற பெண்மணி அங்கு சீனர் ஒருவரிடத்திலும், இந்தியர் ஒருவரிடத்திலும் சாமான்கள் வாங்கிக் கொள்கிறார். அப்போது அந்த சீன வணிகர் குலா மலாக்கா எனப்படும் பொருளுக்கு பணம் வாங்காமல் அன்பளிப்பாகக் கொடுக்கிறார்.
வீட்டுக்கு வந்து மலாய்க்காரர்களிடையே பிரபலமான ரெண்டாங் வகை இறைச்சி உணவைத் தயாரித்து அதை சாப்பிட்டுப் பார்க்குமாறு தனது தந்தையை அழைக்கிறார்.
சொராயாவின் ரெண்டாங் சமையலை ருசித்துப் பார்க்கும் அவரது தந்தை உருக்கத்துடன் இந்த ரெண்டாங் உணவின் ருசி காலமான உனது அம்மா சமைத்து வழங்கும் ரெண்டாங் போலவே இருக்கிறது எனக் கூறுகிறார்.
நம்மிடையே இல்லாதவர்களை நினைவுகூர வேண்டும் என்ற தத்துவத்தையும், பாரம்பரியங்கள் தலைமுறை தலைமுறையாகத் தொடர்கின்றன என்ற சித்தாந்தத்தையும் விளக்கும் இந்தக் குறும்படத்தைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்:
யூடியூப் தளத்தில் இதுவரை 480,000 மேற்பட்டோர் பார்த்து மகிழ்ந்திருக்கும் இந்த 4 நிமிடக் குறும்படத்தை நேற்று வெள்ளிக்கிழமை கேஎல்சிசி வளாகத்தில் பெட்ரோனாஸ் அதிகாரபூர்வமாக வெளியிட்டது.
நெகிரி செம்பிலான் மாநில மலாய்க்காரர்களின் மொழி பேசும் பாங்கு, கலாச்சாரப் பின்னணியில் இந்தக் குறும்படம் அமைந்திருக்கிறது.