Home உலகம் ஈரான் பதற்றம்: சவுதிக்கு பில்லியன் கணக்கில் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா!

ஈரான் பதற்றம்: சவுதிக்கு பில்லியன் கணக்கில் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா!

778
0
SHARE
Ad

தெஹ்ரான்: ஈரான் பதற்றம் காரணமாக 8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை சவுதிக்கு விற்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அனுமதி தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.   இவ்வாறாக ஆயுதங்களை விற்க அமெரிக்க காங்கிரஸின் அனுமதியை பெற வேண்டும்.

ஆனால், ஈரான் விவகாரத்தை சுட்டிக் காட்டி அனுமதி வாங்கப்படாமல் ஆயுதங்கள் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. நேரடியாக டிரம்பே இதற்கான அனுமதியை வழங்கி உள்ளார். இதற்கு சில ஜனநாயகவாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

அது போல, 1500 படை வீரர்களை மத்திய கிழக்கிற்கு அனுப்ப இருப்பதாகவும் பாதுகாப்பு செயலாளர் கூறி உள்ளார். மேலும் அவர் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற பாதுகாப்பு ஆயுதங்கள் அனுப்பப்படும் எனவும் கூறி உள்ளார்.

#TamilSchoolmychoice

ஆனால், இவை குறைந்த அளவிலான படைகளே என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.

எண்ணெய் கப்பலை தாக்கியதாக அமெரிக்கா உயரதிகாரிகள் நேரடியாக ஈரானை குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. மர்மமான குண்டுகள் வெடித்ததில் ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் சேதமாகின.