புது டில்லி: இந்தியாவின் 17-வது மக்களைவத் தேர்தலில் அதிக பெரும்பான்மை வாக்குகளுடன் இரண்டாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்க இருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமர் மகாதீர் முகமட் மற்றும் துணைப் பிரதமர் வான் அசிசாவின் வாழ்த்துகளுக்கு மோடி பதிலளித்துள்ளார்.
“கடந்த ஆண்டு நமது சந்திப்பினை நான் தற்போது நினைவுக்கூறுகிறேன். அனைத்துப் பிரிவுகளிலும் மலேசியாவைப் பன்முகப்படுத்தியுள்ள உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்காக மலேசியாவுடன் நெருக்கமாக உழைக்க விரும்புகிறேன்” என நரேந்திர மோடி பதிலளித்துள்ளார்.
இதனிடையே, டாக்டர் வான் அசிசாவின் வாழ்த்துக்கு பதிலளித்த மோடி, இரு நாட்டின் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதற்கு தாம் முனைப்பு காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வருகிற மே 30-ஆம் தேதி, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு, இந்திய மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 353 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்க உள்ளார்.
நாடு முழுவதும் நடைபெற்ற 17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 353 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக தனிப் பெரும்பான்மையாக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.