Home நாடு ஜசெகவின் பரிந்துரையை மஸ்லீ ஏற்பது அவசரமான முடிவு!- காலிட் நோர்டின்

ஜசெகவின் பரிந்துரையை மஸ்லீ ஏற்பது அவசரமான முடிவு!- காலிட் நோர்டின்

818
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மெட்ரிகுலேஷன் வகுப்புகள் குறித்து ஜசெக கட்சியின் இளைஞர் பகுதி தலைவரின் அறிவுரையை ஏற்கும் கல்வி அமைச்சரின் முடிவானது சரியாக இருக்காது என அம்னோ உதவித் தலைவர் முகமட் காலிட் நோர்டின் கூறினார். கண்மூடித்தனமாக ஜசெகவின் பரிந்துரையை ஏற்க வேண்டாம் என அவர் மஸ்லீ மாலீக்கை அவர் எச்சரித்துள்ளார்.

இந்த பரிந்துரைகள் அனைத்தும் அரசியல் நோக்கங்களுடனும்,  வெற்று குழப்பங்களை ஏற்படுத்துமே தவிர தீர்வை ஏற்படுத்தாது” என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இனவாதத்திற்கு எதிரானதாக இருப்பதாகக் கூறும் ஒரு கட்சியிலிருந்து வந்தாலும், அதன் (ஜசெக) செயற்பாட்டில் இனவாத சாக்குகளை பயன்படுத்துகிறதுஎன்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அரசியல் கட்சிகள் கொடுக்கும் எந்த ஓர் ஆலோசனைகளையும் பரிசீலிக்க வேண்டும் என அவர் கல்வி அமைச்சரை காலிட் கேட்டுக் கொண்டார்.

“மெட்ரிக்குலேஷன்  நோக்கம் இடைவெளியை சரி செய்து, சமநிலையை அறிமுகப்படுத்துவதாக இருந்தது. இது ஒழுங்காக நிர்வகிக்கப்படாவிட்டால், அந்த இடைவெளி விரிவடைந்து மோசமாகிவிடும்என்று அவர் கூறினார்.