Home வணிகம்/தொழில் நுட்பம் 2020 முதல் வாட்சாப் நிலைப்பக்கத்தில் விளம்பரம் செய்யலாம்!

2020 முதல் வாட்சாப் நிலைப்பக்கத்தில் விளம்பரம் செய்யலாம்!

1198
0
SHARE
Ad

கலிபோர்னியா: வாட்சாப் நிலைப்பக்கத்தில் (status page) விளம்பரம் செய்யும் வசதியை விரைவில் அளிக்க உள்ளதாக வாட்சாப் நிறுவனம் அறிவித்துள்ளது. 2020-ஆம் ஆண்டு இந்த வசதி பயன்பாட்டுக்கு வரும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நெதர்லாந்தில் நடந்த பேஸ்புக் சந்தைப்படுத்துதல் மாநாட்டில் இந்த மேம்படுத்தும் அமைப்பு வரவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று வாட்சாப். இதுவரை இலவசமாக உள்ள வாட்சாப் வருவாய் எதிர்நோக்கி விளம்பரங்களுக்கு இடம் கொடுக்க முடிவு செய்திருக்கிறது. ஸ்டேட்டஸில் விளம்பரம் செய்பவர்களிடம் வசூல் செய்ய திட்டமிட்டுள்ளது.

பேஸ்புக், யூடியூபில், டுவிட்டர் போன்றவற்றிலும் காணொளிகளுக்கு மத்தியிலும் பதிவுகளுக்கு இடையிலும் விளம்பரங்கள் வருவது போல் வாட்சாப் ஸ்டேட்டஸ்களுக்கு இடையிலும் இனி விளம்பரங்கள் தோன்ற உள்ளன