Home நாடு டிஎன்பி: மின்சாரக் கட்டண அதிகரிப்பு, அருகிலுள்ள டிஎன்பி அலுவலகத்தை நாடவும்!

டிஎன்பி: மின்சாரக் கட்டண அதிகரிப்பு, அருகிலுள்ள டிஎன்பி அலுவலகத்தை நாடவும்!

816
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மின்சாரக் கட்டணம் அதிகமாக விதிக்கப்பட்டிருந்தால், அருகிலுள்ள டிஎன்பி அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று கண்டறியுமாறு மக்களை டெனாகா நேஷனால் பெர்ஹாட் (டிஎன்பி) கேட்டுக் கொண்டுள்ளது.

ஆயினும், இது குறித்த ஆழமான காரணத்தை அந்நிறுவனம் வெளியிடவில்லை. ஒவ்வொரு புகாரையும் ஆராய்ந்த பின்னரே காரணத்தைக் கூற இயலும் என்று அறிக்கையின் மூலமாக அது தெரிவித்திருந்தது.

மேலும், ஒவ்வொரு பயனரின் விபரங்களும் அப்பகுதியிலுள்ள டிஎன்பி அலுவலகத்தில் மட்டுமே கிடைக்கப்படும் எனவும் அது குறிப்பிட்டிருந்தது.

#TamilSchoolmychoice

டிஎன்பியின் ஸ்மார்ட் மீட்டர் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், பல பயனாளர்கள் தங்களது மின்சாரக் கட்டணங்கள் கணிசமான அளவில் உயர்ந்துள்ளதாக கூறியுள்ளனர். 

அப்படி ஒரு வேளை கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்பட்டிருந்தால், அவற்றை மீண்டும் பயனாளரின் கணக்கிலேயே செலுத்தப்படும் என டிஎன்பி தெரிவித்துள்ளது.