Home இந்தியா ராகுல் பதவி விலகுவது தள்ளி போகலாம், ஆயினும் மாற்றம் நடந்தே தீரும்!- கட்சி வட்டாரம்

ராகுல் பதவி விலகுவது தள்ளி போகலாம், ஆயினும் மாற்றம் நடந்தே தீரும்!- கட்சி வட்டாரம்

764
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை அடைந்ததன் விளைவாக, கடந்த சனிக்கிழமை காங்கிரஸ் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் முன்னர் ராகுல், கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கூறியிருந்தார். ஆனால், அவரது பதவி விலகலை மத்திய செயற்குழு ஏற்கவில்லை.

தற்போது, ராகுல், கட்சித் தலைவர் பதவியை விட்டுத் தரப்போவதில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க அவர் கட்சிக்கு கால அவகாசம் கொடுக்க உள்ளதாகவும் தெரிகிறது

ராகுலின் இந்த முடிவுக்கு அவரது தாயார் சோனியா காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது மாற்றத்துக்கான நேரம் என்பதை இருவரும் உணர்ந்திருப்பதாக தெரிகிறது