Home நாடு நாட்டின் முக்கிய வரலாற்றாசிரியர் பேராசிரியர் கூ கய் கிம் காலமானார்!

நாட்டின் முக்கிய வரலாற்றாசிரியர் பேராசிரியர் கூ கய் கிம் காலமானார்!

671
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டின் முக்கியமான வரலாற்று ஆசிரியரான பேராசிரியர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் கூ கய் கிம் நுரையீரல் செயலிழப்பினால் காலமானதாக பிரி மலேசியா டுடே பதிவிட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையில் அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 82.

அன்னாரின் உடல் அடக்கம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.