Home உலகம் தோக்கியோ: 20 பேருக்கு கத்தி குத்து, ஜப்பானை உலுக்கிய சம்பவம்!

தோக்கியோ: 20 பேருக்கு கத்தி குத்து, ஜப்பானை உலுக்கிய சம்பவம்!

798
0
SHARE
Ad

தோக்கியோ: ஜப்பானின் தலைநகரான தோக்கியோவில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் அடையாளம் தெரியாத ஆடவன் ஒருவன் 20 பேரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளான். இந்த சம்பவத்தில் பெரும்பாலும் பள்ளி மாணவர்கள் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

உள்ளூர் தீயணைப்பு துறைக்கு  காலை 7.45 மணிக்கு இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டதாகவும்,  இதில் பெரும்பாலும் காயமடைந்தவர்கள் தொடக்கப் பள்ளி மாணவிகள் என்றும் கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட 40 அல்லது 50 வயதுடைய அந்த ஆடவனை காவல் துறையினர் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.  தன்னை தானே தாக்கிக் கொண்ட காயம் அந்த ஆடவனின் தோள்பட்டை மற்றும் கழுத்துப் பகுதியில் காணப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

ஜப்பானில் வன்முறை குற்றங்கள் நடப்பது அரிதான ஒன்று. ஆனால், இந்த சம்பவம் அந்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.