Home உலகம் கிரிக்கெட் : 105 பந்துகளிலேயே மேற்கிந்தியத் தீவுகளிடம் சுருண்டது பாகிஸ்தான்

கிரிக்கெட் : 105 பந்துகளிலேயே மேற்கிந்தியத் தீவுகளிடம் சுருண்டது பாகிஸ்தான்

715
0
SHARE
Ad

நோட்டிங்ஹாம் (இங்கிலாந்து) – உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தானும், வெஸ்ட் இண்டீஸ் எனப்படும் மேற்கிந்தியத் தீவுகளுக்கான அணியும் மோதின.

இதில் பாகிஸ்தான் படுமோசமான தோல்வியைச் சந்தித்தது. முதல் பாதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவு பந்து வீச, பாகிஸ்தான் 50 ஓவர்களில் 105 பந்துகளிலேயே 10 விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.

பாகிஸ்தான் எடுத்த 105 ஓட்டங்களை மிஞ்ச வேண்டும் என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய மேற்கிந்திய தீவுகள், இரண்டாவது பாதியில் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 108 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து மேற்கிந்தியத் தீவு 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஒருநாள் போட்டியில் சில மணி நேரங்களிலேயே ஆட்டத்தை முடித்து பாகிஸ்தானை வென்றிருக்கிறது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

இன்று நடைபெறும் உலகக் கிண்ணப்போட்டிகளின் வரிசையில் இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தும் இலங்கையும் மோதுகின்றன.

இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், ஆப்கானிஸ்தானும் மோதுகின்றன.