Home உலகம் அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 12 பேர் பலி!

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 12 பேர் பலி!

732
0
SHARE
Ad

வர்ஜீனியா: வர்ஜீனியா கடற்கரை நகர கட்டிடத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் (அமெரிக்க நேரப்படி) ஆடவன் ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் உயிர் இழந்தனர். மேலும், நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக வர்ஜீனியா அரசு தெரிவித்துள்ளது.

காவல் துறையினருக்கும் துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவனுக்கும் இடையிலான துப்பாக்கிச் சூட்டில், அந்த ஆடவன் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. துப்பாக்கி சூடு நடத்தியவர் ஒரு பொது பயன்பாட்டு தொழிலாளி என காவல் துறை தலைவர் ஜேம்ஸ் செரவேரா கூறினார்.

வர்ஜீனியா கடற்கரை வரலாற்றில் இது மிகவும் கொடுரமான நாள் என்று மேயர் பாபி டயர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இதில் மரணமுற்றவர்கள் எங்கள் நண்பர்கள், சக பணியாளர்கள், சக ஊழியர்கள்.” என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த நவம்பர் மாதத்திற்குப் பிறகு அமெரிக்காவில் நடந்த மிக மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவம் இது என குறிப்பிடப்படுகிறது. இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரப்புக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஹோகன் கிட்லி கூறினார்.