Home நாடு 1எம்டிபி விவகாரத்தில் அபாண்டி விசாரிக்கப்படவில்லை!

1எம்டிபி விவகாரத்தில் அபாண்டி விசாரிக்கப்படவில்லை!

672
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 1எம்டிபி ஊழல் விவகாரத்தில் முன்னாள் அரசாங்க தலைமை வழக்கறிஞர் முகமட் அபாண்டி அலி விசாரிக்கப்படவில்லை என ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) வட்டாரம் குறிப்பிட்டுள்ளதாக மலேசியாகினி செய்தி பதிவிட்டுள்ளது.

1எம்டிபி விவகாரம் குறித்து முன்னாள் அரசாங்க தலைமை வழக்கறிஞர் நஜிப்புக்கு சாதகமாக பேசியது குறித்து ஆராயப்பட வேண்டும் என ஜசெக கட்சி ஆலோசகர் லிம் குவான் எங் தெரிவித்தற்குப் அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை உள்துறை அமைச்சு அபாண்டி வெளிநாடுகளுக்கு செல்லத் தடை விதித்திருந்ததை மீட்டுக் கொண்டதாக அறிவித்திருந்தது.

#TamilSchoolmychoice

கடந்த 2015-ஆம் ஆண்டு முன்னாள் அரசாங்க தலைமை வழக்கறிஞர் கானி பாடாய்ல்லுக்கு பதிலாக அபாண்டி நியமிக்கப்பட்டார். உடல் நிலைக் காரணத்தைக் காட்டி அவர் விலகியிருந்தாலும், நஜிப்பை குற்றம் சாட்ட அவர் முயற்சித்து வந்ததன் பேரில் அவர் நீக்கப்பட்டார் எனும் கருத்துகளும் வெளியாகின என லிம் குறிப்பிட்டார் .

அத்தருணத்தில், ஊழல் தடுப்பு ஆணையத்தின் குறித்த சாட்சியங்கள், சிறப்பு விசாரணைக் குழு ஆவணங்கள் ஆதரவு அடிப்படையில், கடந்த 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22-ஆம் தேதி மற்றும் ஏப்ரல் 10-ஆம் தேதிகளுக்கிடயே பெற்ற 681 மில்லியன் அமெரிக்க டாலர் சவூதி அரேபியா அரச குடும்பத்தில் இருந்து எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு தனிப்பட்ட பங்களிப்பாக நஜிப்புக்கு கொடுக்கபப்ட்டது என அபாண்டி கூறியிருந்தார்.

தற்போது, எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான விசாரணை கோலாலாம்பூர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய நிதி மோசடி மற்றும் அதிகார விதிமீறல் காரணமாக மூன்று குற்றச்சாட்டுக்களை எதிர் நோக்கியுள்ளார்